பழைய விதிகள் தொடர்ந்தால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி - ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி

பழைய விதிகள் தொடர்ந்தால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பழைய விதிகள் தொடர்ந்தால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டி - ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி
Published on

மயிலாடுதுறை,

பழைய விதிகள் தொடர்ந்தால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,

அதிமுகவில் புதிய விதிகள் நீக்கப்பட்டு , பழைய விதிகள் தொடர்ந்தால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவேன் .அதிமுகவில் எம்,ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் இருந்த விதிகள் தற்போது மாற்றப்பட்டுள்ளது,அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் அதிமுக வெற்றி பெறும்.

நான் ஏற்கனவே கூறியது போல அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் .சாதாரண தொண்டர்கள் கூட கழகத்தின் உச்சபட்ச பதவிக்கு போட்டியிடலாம் .ஆனால் அதற்கு கழகத்தின் சட்டவிதியை மாற்றக்கூடாது என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம்.என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com