அமித்ஷா சொல்படி நடக்கும் பரிதாப நிலையில் அதிமுக: பெ.சண்முகம் விமர்சனம்

பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
அதிமுகவில் ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனியாக டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து வருகின்றனர். எனவே பாஜகதான் அதிமுகவை வழி நடத்துகிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
அதிமுக எத்தனை கோஷ்டிகளாக பிரிந்தாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜகதான். மோடியா லேடியா என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக இயக்கம் இன்றைக்கு ‘அண்ணன் அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதன் படிதான் நடப்போம்’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதைத் தான் இந்த டெல்லி சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






