

சென்னை
ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து விசாரிக்க கோரி முதல்வர் பழனிசாமிக்கு, மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன், கூறியதாவது:-
ஆர்.கே.நகரில் அதிமுக தோல்விக்கு மெத்தனப்போக்கே காரணம் . மதுசூதனன் கடிதம் குறித்து அதிமுக உயர்மட்ட குழு கூடி முடிவு செய்யும் .தேர்தலில் வெற்றி, தோல்வி இரண்டுமே நடந்து கொண்டு தான் இருக்கும். தேர்தல் நிர்வாகிகள் தங்களால் முடிந்த அளவிற்கு தேர்தல் பணியாற்றினர். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையவில்லை.
#RKNagar | #AIADMK