உழைப்பவர்களுக்கு உயர்வு தரும் உடைக்க முடியாத கோட்டை அதிமுக: எடப்பாடி பழனிசாமி

அண்ணா திமுகவில் உழைப்பு இருக்கிறது. இங்கு உழைக்கும் மக்களுக்கு இடம் உண்டு என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
உழைப்பவர்களுக்கு உயர்வு தரும் உடைக்க முடியாத கோட்டை அதிமுக: எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பெரம்பலூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் கூறியதாவது:-

அண்ணா திமுகவில் உழைப்பு இருக்கிறது. இங்கு உழைக்கும் மக்களுக்கு இடம் உண்டு. இது ஜனநாயகமுள்ள கட்சி. நீங்கள் எத்தனை முறை முயற்சி செய்தாலும் உடைக்க முடியாது. மேலும் கட்சியை உடைக்க முடிந்ததா எனவும் கேள்வி எழுப்பினார்.இங்கு இருந்து ஒருவர் அங்கு போய் சேர்ந்துள்ளதாக கூறினார். அதிமுகவில் உள்ளவர்களே அவரை மீண்டும் இணைத்து கொள்ளலாம் என்று சொன்னதாகவும்.

அவரை கட்சியில் சேர்த்து கொண்டால் மொத்த கட்சியும் போய்விடும் என எச்சரித்ததாகவும் தெரிவித்தார். அவர் திமுகவிற்கு பி டீம் ஆக செயல்படுவதாகவும் சொல்லி கொண்டே இருந்தேன். இப்போது சேர்த்து கொள்ளலாம் என்று சொன்னவர்களே அண்ணா நல்ல வேலை நமது கட்சி தப்பிவிட்டது என்று தெரிவித்ததாக கூறினார். ஆக திமுகவிற்கு பி டீம் ஆக இருந்தவர் இப்போது அங்கேயே போய் இணைந்ததாக கூறினார்.

கேவலமாக இல்லையா, அசிங்கமா இல்லையா, அவர் ஒரு மனிதனா எனவும் கேள்வி எழுப்பினார்.மனிதனாக பிறந்தால் ரோசம் இருக்க வேண்டும் அப்படி அவர் இல்லை என்றும் கூறினார். பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சில ஜென்மங்கள் நம் மண்ணிலே பிறந்திருக்கிறது அதையும் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் மற்றும் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் ஆசியுடன் விரட்டியதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com