அதிமுகதான் பாஜகவின் 'பி' டீம் - திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்

அதிமுகதான் பாஜகவின் 'பி' டீம் என்று திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

திமுகவின் 'பி' டீமாக சசிகலா செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்துக்கு திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திமுகவிற்கு எந்த பி டீமும் தேவையில்லை. அதிமுகதான் பாஜகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறது. உடல்நலம் குறைவான அம்மையாரை அதிமுகவினர் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெறும். தளபதி முதல்வராவார். அதிமுக செய்யாதவற்றை செய்ததாக சொல்லி ஓட்டு கேட்கின்றனர்? திமுக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறோம். திமுகவில் இருக்கக்கூடிய கூட்டணிகள் தொடரும். அப்படி ஏதாவது மாற்றங்கள் இருந்தால் திமுக தலைமை முடிவு எடுக்கும். பிஜேபியுடன் கூட்டணியில் இருப்பது தவறு என்று அதிமுக எண்ணுகிறது.

அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடுதான். தற்போது முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், மு.க.அழகிரி குறித்து ஸ்டாலின் முடிவு எடுப்பார்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் கூட்டுறவு வங்கி கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாகவே இருந்துள்ளது. அதேபோல் வங்கி கடன் தள்ளுபடி அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com