தேர்தல் களத்தில் அதிமுக தான் முன்னனியில் இருக்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

அதிமுக தான் தேர்தல் களத்தில் முன்னனியில் இருக்கிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களத்தில் அதிமுக தான் முன்னனியில் இருக்கிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Published on

மதுரை,

திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிமுக செய்த பிறகு தான் திமுக இவற்றையெல்லாம் செய்வதாக குறிப்பிட்டார்.

இது குறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளுமே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பரக் குழு என பல்வேறு குழுக்களை அமைப்பார்கள். அதிமுக இதையெல்லாம் செய்த பிறகு தான் திமுக குழு அமைக்கிறது. அந்த வகையில் அதிமுக தான் தேர்தல் களத்தில் முன்னனியில் இருக்கிறது.

மக்களை சந்திப்பதிலும், மக்களுக்கு சேவை செய்வதிலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் முன்னனியில் இருக்கிறார். தேர்தல் அறிக்கை என்பது கட்சியின் பொக்கிஷம். அதுதான் மக்களின் கவனம், செல்வாக்கு, வாக்குவங்கி அனைத்தையும் பெறக்கூடியது. எனவே அது மிகவும் முக்கியமான பணியாகும். அதிமுகவின் தேர்தல் அறிக்கை திருவிழா போல வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com