அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம் - அதிமுக தலைமை

அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் கட்சியில் இருந்து நீக்கம் - அதிமுக தலைமை
Published on

சென்னை,

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் யுவராஜ் மற்றும் கர்நாடக மாநில அமமுக செயலாளர் சம்பத் ஆகியோர் கொரோனா சிகிச்சை முடிந்து சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலாவை சந்திக்க சென்றனர். ஆனால் கொரோனா சிகிச்சை வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் சசிகலா, கர்நாடக அதிமுக செயலாளரை சந்திக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:- சசிகலாவை சந்திக்க சென்ற விவகாரம் தொடர்பாக விசாரிக்க யுவராஜை தொடர்கொள்ள முயன்றோம், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை, அதனால் முழுமையான தகவல் இதுவரை கிடைக்கவில்லை இல்லை. கட்சி கட்டுப்பாடுகளை மீறி ஒருவேளை அவர் சசிகலாவை சந்திக்க சென்றது உறுதியானால் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலாவை சந்திக்க முயன்ற அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜை கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டாதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த எம்.பி.யுவராஜ் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கீ வைக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com