பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்து அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் பொதுக்கூட்ட மேடையில் இருந்தபோது, முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எம்.எஸ்.திலகர் திடீரென மயங்கி விழுந்தார்.
பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்து அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழப்பு.
Published on: 

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவரத்தில் அ.தி.மு.க. சார்பில் நடந்த 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்த அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்தார்.

அ.தி.மு.க. 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேசுவரத்தில் அ.தி.மு.க. சார்பில் 55-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எம்.எஸ்.திலகர் (வயது 76) பங்கேற்று பேசினார்.

மயங்கி விழுந்து அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழப்பு

பின்னர் அவர் மேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்தார். அப்போது திடீரென திலகர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மேடையில் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே திலகர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

X