‘அ.தி.மு.க.வினர் ஆதரவு 100 சதவீதம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது’ திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

வேறு அணிக்கு சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அ.தி.மு.க. தயாராக இருக்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
‘அ.தி.மு.க.வினர் ஆதரவு 100 சதவீதம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது’  திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று திண்டுக்கல் லில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்பவர்கள் அனைவரும் நேற்று நடந்த கூட்டத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். எனவே எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் ஆதரவு திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் இருக்கிறது. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைவாரா?, இல்லையா? என கேட்கிறார்கள். அதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காதவர்கள் வேறு ஏதாவது ஆதாயம் பெற நினைக்கலாம். அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். என்னிடம் கேட்பது முறையல்ல. நான் ஜோதிடர் அல்ல. எனக்கு தெரியாது. வேறு அணிக்கு சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அ.தி.மு.க. தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com