அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு..!
Published on

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்துவரும் நிலையில் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மேலும் எதிர்க்கட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூச்சல் எழுப்பினர்.

அதனை தொடர்ந்து அதிமுகவினரை அமைதியாக உட்கார சபாநாயகர் அறிவுறித்தினார். அதையடுத்து பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபை கூட்டத்தொடரில் அமைச்சர் வாசித்த பட்ஜெட் உரையை தவிர்த்து எந்த சத்தமும் அவைக்குறிப்பில் ஏற்றப்படாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com