

சென்னை,
தமிழக அமைச்சரவையில் பால்வள துறை அமைச்சராக இருந்து வருபவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இவர் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்து உள்ளனர்.