ஜனவரி 3 -ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

பரபரப்பான அரசியல் சூழலில் ஜனவரி 3 -ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #admk #ttvdhinakaran
ஜனவரி 3 -ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி, 2018-ம் ஆண்டுக்கான கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 8-ந் தேதி தொடங்குகிறது. அன்று சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றுகிறார்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக டிடிவி தினகரன் எம்.எல்.ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளார். இதனால், நடைபெற உள்ள சட்டமன்றத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com