அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என உறுதியானது - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி

அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என உறுதியானது என்று ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என உறுதியானது - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடி
Published on

சென்னை,

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

அதில், அ.தி.மு.க வின் ஜூன் 23 ந்தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது.

பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என உறுதியானது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com