சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு

எடப்பாடி பழனிசாமி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதன் விளைவாக நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது என்று அதிமுக தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் தூக்கு தண்டனை விதித்து மதுரை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதன் விளைவாக இன்றைய தினம் ஒரு நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது.

காவல் மரணங்களை அஇஅதிமுக ஒருபோதும் ஆதரித்தது இல்லை என்பதற்கு, பாரபட்சமற்ற விசாரணைக்கு இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதே சாட்சி. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும், சட்டத்தின் முறையில் தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி செய்திருக்கிறது அஇஅதிமுக அரசு.

திமுக-வைப் போல் சிபிஐ விசாரணைக்கு பயந்து நீதிமன்றம் சென்று வாதாடும் அரசு அல்ல அஇஅதிமுக அரசு. திமுக ஆட்சியில் நடைபெற்ற 30-க்கும் மேற்பட்ட காவல் மரணங்களுக்கும் இதேபோல் உரிய நீதியை விரைவில் அமையப்போகும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு நிலைநாட்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com