அ.தி.மு.க.வின் 55ஆம் ஆண்டு தொடக்கம்: தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் 55ஆம் ஆண்டு தொடக்கம்: தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு
Published on: 

சென்னை,

அ.தி.மு.க.வின் 55ஆம் ஆண்டு தொடக்க நாளையொட்டி அக்.17, அக்.22, 23ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தொடக்கவிழா பொதுக்கூட்டம்

அ.தி.மு.க.வின் 55ஆவது ஆண்டை முன்னிட்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் அக்.17, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

அக்.17ம் தேதி செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் மற்றும் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. சி.வி.சண்முகம் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com