

சென்னை,
சென்னை போயஸ்கார்டனில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவிற்கு இப்போதைய தேவை ஒற்றுமை மட்டுமேயாகும். நாம் ஒன்றாக இருந்து இருந்தால் இன்றைக்கு அதிமுக ஆட்சி அமைந்து இருக்கும். அதிமுக ஒன்றிணையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுகவை அழிக்க நினைத்த கட்சி திமுக.
திமுக எதிர்ப்பு மனப்பான்மையை ஒருபோதும் விட மாட்டோம். திமுக - அதிமுக கூட்டணி என்ற தகவலை கேட்டு 4 நட்களாக சாப்பிடவில்லை. அதிமுக பிளவு திமுகவிற்கு சாதகமாக இருக்கும். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கைஉள்ளது. அதிமுக ஒன்றிணைவதற்கனா அறிகுறிகள் தெரிகின்றன” இவ்வாறு அவர் கூறினார்.