கோயம்பேட்டில் ஐம்பொன் சிலை கடத்தல்? -சிலைகளை கைமாற்றும் போது போலீசில் சிக்கினர்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஐம்பொன் சிலைகளை கைமாற்ற காத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்பேட்டில் ஐம்பொன் சிலை கடத்தல்? -சிலைகளை கைமாற்றும் போது போலீசில் சிக்கினர்
Published on

கோயம்பேடு,

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சீக்ரெட் கோடாக பழைய 2 ரூபாய் நோட்டுகளுடன் ஐம்பொன் சிலைகளை கைமாற்ற காத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக 2 பேர் இருந்ததை கண்ட போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். போலீசார் நெருங்குவதை கண்டவுடன் 2 பேரில் ஒருவர் தப்பி ஓடியுள்ளார். மற்றொரு நபரை மடக்கிப்பிடித்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர்.

அதில், ஐம்பொன் சிலையும், 300 கிராம் எடை கொண்ட பெருமாள் சிலையும் இருப்பதை கண்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் பெயர் சுதாகர் என்பதும், உடன் வந்திருந்த மற்றொரு நபர் தினேஷ் என்பதும் தெரிய வந்தது.

பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த பெண் ஒருவர், சிலைகளை வழங்கி சென்னைக்கு அனுப்பி வைத்ததாகவும், சீக்ரெட் கோடாக பழைய 2 ரூபாய் நோட்டை காண்பித்தால், ஒரு நபர் வந்து 3 லட்சம் ரூபாய் கொடுத்து சிலைகளை பெற்றுக் கொள்வார் என்பதும் தெரியவந்தது. தப்பியோடிய நபர் பற்றியும், சிலைகளின் பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com