வட சென்னையில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தம்: டெண்டர் வெளியீடு


வட சென்னையில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தம்: டெண்டர் வெளியீடு
x
தினத்தந்தி 2 July 2025 10:06 AM IST (Updated: 2 July 2025 11:22 AM IST)
t-max-icont-min-icon

வட சென்னையில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன.

சென்னை,

தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் குளிர்சாதன வசதியுடன் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இதனை தொடர்ந்து மேலும் சில இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற பேருந்து நிறுத்தங்களில், பயணிகளுக்கு குளிர்ச்சியான சூழ்நிலை கிடைக்கும் வகையில், குளிரூட்டும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், நவீன வசதிகளான, இருக்கைகள், சார்ஜிங் பாயின்ட்கள் மற்றும் பிற வசதிகள் அமைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வட சென்னையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 4 பேருந்து நிறுத்தங்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது. பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் இந்த ஏசி பேருந்து நிறுத்தங்கள் அமைகின்றன.

1 More update

Next Story