சென்னையில் இருந்து புறப்பட இருந்த ஏர் பிரான்ஸ் விமானம் இயந்திர கோளாறால் ரத்து...!

விமானத்தில் சுமார் 290 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர்.
சென்னையில் இருந்து புறப்பட இருந்த ஏர் பிரான்ஸ் விமானம் இயந்திர கோளாறால் ரத்து...!
Published on

சென்னை, 

இன்று அதிகாலை சென்னையில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு ஏர் பிரான்ஸ் விமானம் இயக்கப்பட இருந்தது. இதில் சுமார் 290 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். விமானம் புறப்பட தயாராக இருந்த சமயத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது .

இதன் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்ய இருந்த 290 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தங்கள் நாடுகளுக்கு செல்ல இருந்த பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் சென்னையில் தவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com