சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு

காற்று மாசு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
காற்று மாசு
காற்று மாசு
Published on: 

தீபாவளி பண்டிகை மிகவும் உற்சாகமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது பட்டாசுகள்'தான். தீபாவளி பண்டிகை அன்று அதிகாலையிலே எழுந்து, புத்தாடைகளை உடுத்தி பட்டாசுகளை உடைப்பது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் உள்ள மக்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறிவருகின்றனர்.

குறிப்பாக, சென்னை மாநகரத்தில் நேற்றிலிருந்தே பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அதேபோல, இரவிலும் 7- 8 மணி வரை பட்டாசுகளை வெடித்து தள்ளினர். மழை பெயத போதிலும் மழை விட்ட நேரத்தில் மொத்தமாக மக்கள் பட்டாசுளை வெடித்து தள்ளினர். தீபாவளி பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசுவும் கடுமையாக அதிகரித்துள்ளது.

சென்னையில் காற்றின் தரக்குறியீடு சராசரியாக 159 என்று பதிவானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காற்று மாசு தரக்குறியீடு அதிகபட்சமாக ராயபுரத்தில் 238, பெருங்குடியில் 175, மணலி 168, கொடுங்கையூர் 166, அரும்பாக்கம் 165 என பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 6 ஆம் தேதி 56 என்றும், 7 ஆம் தேதி 74 என்றும் இருந்த காற்றின் தரக்குறியீடு அதிகரித்து 159 என்ற அளவை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காற்று மாசு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

X