ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக 10-ந்தேதி முதல் கொழும்புவுக்கு விமான சேவை

வருகிற 10-ந்தேதி முதல் ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக கொழும்புவுக்கு விமானம் இயக்கப்படுகிறது.
ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக 10-ந்தேதி முதல் கொழும்புவுக்கு விமான சேவை
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள் நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை விமான நிலையத்தை பொறுத்தவரை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா ஆகிய 3 விமான நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், வருகிற 10-ந்தேதி முதல் ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக கொழும்புவுக்கு விமானம் இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் வருகிற 19-ந்தேதி வரை ஸ்பைஸ் ஜெட்-2705 விமானம் ஐதராபாத்தில் இருந்து தினமும் காலை 10.35 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு பகல் 12.15 மணிக்கு வந்தடையும். பின்னர் அதே விமானம் மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு 2.25 மணிக்கு கொழும்பு சென்றடையும்.

அதே போல் கொழும்புவிலிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது. பின்னர் மதுரையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு ஐதராபாத் சென்றடையும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் ஆதரவை பொறுத்து இதே நிலை நீடிக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com