சென்னைக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
சென்னைக்கான விமான கட்டணம் பல மடங்கு உயர்வு
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். ரெயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டு வந்தது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையை அடைய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் விமானம் மூலம் சென்னை திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

தற்போது விமானங்களில் பயணம் செய்வோருக்கு விமானகட்டணம் பல மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இருந்தாலும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பயண கட்டணங்களை விமான நிறுவனங்கள் நேற்றிரவு முதல் உயர்த்தியுள்ளன.

இதன்படி உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள் பின்வருமாறு:-

மதுரை-சென்னை வழக்கமான கட்டணம் ரூ5.099, உயர்த்தப்பட்ட கட்டணம் ரூ.32,508

தூத்துக்குடி - சென்னை வழக்கமான கட்டணம் ரூ5,354, உயர்த்தப்பட்ட கட்டணம் ரூ.17,089

திருச்சி - சென்னை வழக்கமான கட்டணம் ரூ4,551 உயர்த்தப்பட்ட கட்டணம் ரூ.14,310

கோவை - சென்னை வழக்கமான கட்டணம் ரூ.4,634உயர்த்தப்பட்ட கட்டணம் ரூ.11,149

X

Daily Thanthi
www.dailythanthi.com