விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பணி: ரூ.1964 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு

இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தில் மொத்தம் 13 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் பணி: ரூ.1964 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு
Published on

சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 9 ஆயிரத்து 445 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்திற்கு தமிழக அரசு முன்னதாக அனுமதி வழங்கியது.

சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தில் மொத்தம் 13 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தமிழக அரசு முதற்கட்டமாக தற்போது ரூ.1964 கோடியை ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com