அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னராக நியமிக்க வாய்ப்பு

மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த் போஸ் திடீரென நேற்று ராஜினாமா செய்தார்.
அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னராக நியமிக்க வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேற்கு வங்காள கவர்னர் ஆனந்த் போஸ் திடீரென்று ராஜினாமா செய்ததால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கவர்னர்கள் மாற்றம் தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷா தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருடன் பேசி உள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேசும் போது புதிய கவர்னர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்து உள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கவர்னராக இருக்கும் அஜய்குமார் பல்லா தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்க பட வாய்ப்பு உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com