அஜித், விஜய் ரசிகர்கள் இணைந்து பேனர் வைத்து அசத்தல்

வாரிசு, துணிவு படம் வெளியாவதையொட்டி திண்டுக்கல்லில் அஜீத், விஜய் ரசிகர்கள் இணைந்து பேனரை வைத்து அசத்தி உள்ளனர்.
அஜித், விஜய் ரசிகர்கள் இணைந்து பேனர் வைத்து அசத்தல்
Published on

பொங்கல் பண்டிகையையொட்டி அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் வெளியாகின்றன. அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால் இருவரின் ரசிகர்களும் உற்சாகம் அடைந்து உள்ளனர். மேலும் ரசிகர்கள் இரு திரைப்படங்களையும் பார்க்கும் ஆவலில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் பல ஊர்களில் ஒரே வளாகத்தில் அடுத்தடுத்து உள்ள தியேட்டர்களில் அஜித், விஜய் படங்கள் திரையிடப்படுகின்றன. இது ரசிகர்களின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் இரு இடங்களில் ஒரே வளாகத்தில் அமைந்த அடுத்தடுத்த தியேட்டர்களில் இருவரின் திரைப்படங்களும் வெளியாகின்றன. இதனால் அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு திரைப்படம் வெற்றியடைய வாழ்த்து பேனர்களை வைத்து இருக்கின்றனர்.

மேலும் திண்டுக்கல் ரவுண்டுரோடு பகுதியில் அமைந்துள்ள தியேட்டர்களுக்கு அருகே அஜித், விஜய் ரசிகர்கள் இணைந்து பேனர்களை வைத்து உள்ளனர். அதில் ஒரு பேனரில், அஜித் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருவது போன்றும், பின்னால் விஜய் அமர்ந்து இருப்பது போன்றும் இருக்கிறது. மேலும் தல, தளபதி திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகிறோம் என்றும், அதற்கு கீழே தல, தளபதி ரசிகர்கள் திண்டுக்கல் என்றும் அச்சிட்டு இருக்கின்றனர். இருவரின் ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் வைத்துள்ள நிலையில், திண்டுக்கல்லில் இருவரின் ரசிகர்களும் இணைந்து வைத்துள்ள வாழ்த்து பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com