திருப்பத்தூர் வேட்பாளர் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த அஜித் ரசிகர்கள்

த.வெ.க. வேட்பாளர் திருப்பதி முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் கட்சியில் இணைந்தனர்.
திருப்பத்தூர் வேட்பாளர் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த அஜித் ரசிகர்கள்
Published on

திருப்பத்தூர்,

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி த.வெ.க. வேட்பாளரான டாக்டர் திருப்பதி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், ஈத்கா மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் த.வெ.க. வேட்பாளர் திருப்பதி முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் கட்சியில் இணைந்தனர்.

அவர்களில் சிலர் கை மற்றும் கழுத்தில் அஜித்தின் உருவப்படத்தை பச்சை குத்தி இருந்தது கவனத்தை ஈர்த்தது. இதன் பின்னர் பேசிய திருப்பதி, திருப்பத்தூர் முழுவதும் தி.மு.க. சார்பில் போலியான டோக்கன் விநியோகம் செய்து பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com