அஜித்குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்; போலீஸ் வாகனத்தில் போலி நம்பர் பிளேட்


அஜித்குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்; போலீஸ் வாகனத்தில் போலி நம்பர் பிளேட்
x

அஜித்தை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் வாகனத்தி போலி நம்பர் பிளேட் இருந்தது அம்பலமாகியுள்ளது

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து போலீஸ்கா ரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். இதற்கிடையில் வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர்.

முதற்கட்டமாக திருப்பு வனம் போலீஸ் நிலையத்தி லிருந்து அவர்கள் வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில், அஜித் குமாரை அடைத்து வைத்து தாக்கிய இடங்களில் ஆய்வு செய்து நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, அஜித்தை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் வாகனத்தி போலி நம்பர் பிளேட் இருந்தது அம்பலமாகியுள்ளது. வாகன பதிவெண் பற்றி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில்2 போலி நம்பர் பிளேட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. TN 01 G 0491 என்ற பதிவெண்ணிற்கு பதிலாக TN 63 G0491 என்ற பதிவெண்ணை பயன்படுத்தியுள்ளனர். அஜித்தை அழைத்து சென்ற டெம்போ வாகனத்தில் இருந்து மது பாட்டில்கள், சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

1 More update

Next Story