ஆலந்தூர் அம்மா உணவகம் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த செய்தி மிகுந்த வேதனையை அளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர் அம்மா உணவகம் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"அம்மா அரசில் செயல்படுத்தப்பட்ட பல நல்ல திட்டங்களுக்கு மூடுவிழா செய்துவந்த விடியா திமுக அரசு, தொடர்ந்து நாங்கள் ஏழை, எளிய, தொழிலாளர்களின் அட்சயப்பாத்திரமாக விளங்கும் அம்மா உணவகங்களை மூடக்கூடாது என்றும், எங்கள் ஆட்சியில் வழங்கியதைப் போன்று தரமான உணவுகளை அம்மா உணவகங்களில் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், இன்று சென்னை ஆலந்தூர் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அரசு பள்ளி இயங்கி வருவதாக வந்த ஊடகச் செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து எல்லாம் அரசு பிரதிநிதிகள் தமிழகத்திற்கு வருகை தந்து அம்மா உணவகங்கள் இயங்குவதையும், தங்களது மாநிலங்களிலும், நாடுகளிலும் உடனடியாக அம்மா உணவகங்களை திறப்போம் என்று சொல்லி வரும் நிலையில், வெளி நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கும் விடியா திமுக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஆலந்தூரில் உள்ள அம்மா உணவகத்தை முழுமையாக நடத்தவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வேறொரு பாதுகாப்பான இடத்தை வழங்கிடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com