அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு; 19 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்

முதலிடம் பிடித்த கார்த்தி என்பவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரையில் அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, நடைபெற்றது. இதற்காக அலங்காநல்லூரில் கடந்த ஒருமாதமாக ஏற்பாடுகள் நடந்தன. வாடிவாசல், பார்வையாளர்கள் கேலரி, பாதுகாப்பு வசதிகள் போன்றவை செய்யப்பட்டு இருந்தன. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து 6,500 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அதில் சிறந்த 1,100 காளைகளுக்கு போட்டியில் பங்கேற்க டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 600 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பாக உள்ள வாடி வாசலில் அரசு வழிகாட்டு தலின்படி தொடங்கியது. காலை முதல் விறுவிறுப்பாக நண்டைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6.40 மணியளவில் நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 19 காளைகளை அடக்கி கார்த்தி என்பவர் முதலிடம் பிடித்தார். இவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டுள்லது. இரண்டம் இடத்தை அபி சித்தர் என்பவர் பிடித்தார். அவருக்கு பைக் வழங்கப்பட்டுள்ளது.






