ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழாவில் திருப்பலி

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழாவில் திருப்பலி நடந்தது.
ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புத கெபி பெருவிழாவில் திருப்பலி
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புத கெபியின் 95-வது ஆண்டு பெருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இப்பெருவிழா வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. முன்னதாக மாலையில் பெருவிழா கொடி ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று மீண்டும் கெபியை வந்தடைந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. விழா நாட்களில் திருயாத்திரை திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியன நடக்கிறது.

24-ந் தேதி காலை திருயாத்திரை திருப்பலியும், மாலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா மாலை ஆராதனை மற்றும் மறையுரையும் நடக்கிறது. அன்றிரவு 9 மணிக்கு சப்பர பவனி நடக்கிறது. 25-ந் தேதி காலை 5.15 மணிக்கு முதல் திருப்பலி, 6.30 மணிக்கு பெருவிழா திருப்பலி, 11.30 மணிக்கு வாரவழிபாடு, திருப்பலி ஆகியவை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், ஜெபமாலை, நற்கருணை ஆசீரும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com