நெகமத்தில்கள், மது விற்ற 2 பேர் பிடிபட்டனர்

நெகமத்தில் கள், மது விற்ற 2 பேர் பிடிபட்டனர்
நெகமத்தில்கள், மது விற்ற 2 பேர் பிடிபட்டனர்
Published on

நெகமம்; நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தில் கள் இறக்கி விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கள் விற்ற, அதேப்பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 55) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் காட்டம்பட்டியில் வடசித்தூர் செல்லும் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை பின்புறம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மது விற்பனை செய்த நபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அழகன்(54) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நெகமம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com