அழகர்கோவில் சித்திரை திருவிழா - புதிதாக 28 உண்டியல்கள்

கள்ளழகர் மதுரைக்கு வரும் போது உண்டியல்கள் உடன் கொண்டு வரப்படுகின்றன.
அழகர்கோவில் சித்திரை திருவிழா - புதிதாக 28 உண்டியல்கள்
Published on

மதுரை,

பிரசித்தி பெற்ற அழகர்கோவில், கள்ளழகர் கோவில் சித்திரை பெருந்திருவிழா வருகிற 12-ந்தேதி மாலையில் தொடங்குகிறது. 13-ந்தேதியும் திருக்கல்யாண மண்டபத்தில் அதே மாலை நேரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 14-ந் தேதி சித்திரை மாதம் 1-ந் தேதி அன்று காலையில் அதே மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார்.

இந்த திருவிழாவையொட்டி கள்ளழகர் மதுரை சென்று திரும்பும் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 28 உண்டியல்களும் அழகர்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் மதுரை புறப்பாடு நிகழ்ச்சியுடன் போது சுவாமியுடன் 28 உண்டியல்களும் எடுத்து செல்லப்படுகின்றன. ஆங்காங்கே பக்தர்களிடம் காணிக்கை உண்டியல்களில் பெறப்படுகின்றன. பின்னர் கள்ளழகர் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் போது, உண்டியல்களும் கோவிலுக்கு காண்டு வரப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com