அனைவரும் சமம் என்பதே சனாதன தர்மம் - கவர்னர் ஆர்.என்.ரவி

அனைவரும் ஒரே கடவுளைத்தான் வழிபட வேண்டும் என சனாதன தர்மம் கூறவில்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

கன்னியாகுமரி,

அகிலத்திரட்டு அம்மானை, அய்யா வழி பக்தாகளின் புனித நூலாகும். அய்யா வைகுண்டசுவாமி இந்த அகிலத் திரட்டு அம்மானை நூலை அருளிய நாள் காத்திகை மாதம் 27-ம் தேதி ஆகும். இந்த நாளை அய்யாவழி பக்தாகள் ஒவ்வொரு வருடமும் அகிலத்திரட்டு உதய தினமாகக் கொண்டாடி வருகின்றனா.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி, "அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதைத்தான் சனாதன தர்மம் கூறுகிறது. அனைவரும் ஒரே கடவுளைத்தான் வழிபட வேண்டும் என்று சனாதன தர்மம் கூறவில்லை. வேறு மொழி பேசலாம்; வேறு உடை அணியலாம்; ஆனாலும் நாம் அனைவரும் ஒன்றுதான்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com