

சென்னை,
அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அதைத்தொடர்ந்து தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியக் கூடிய ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்த திட்டமிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை), உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 833 மையங்களில் சிறப்பு தகுதித் தேர்வு நடக்கிறது. முதல் தாள் தேர்வு 221 மையங்களிலும் 2-ம் தாள் தேர்வு 612 மையங்களிலும் நடைபெறுகிறது.
முதல் தாள் தேர்வு 61,372 பேரும் 2-வது தாள் தேர்வை ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 648 பேரும் எழுத உள்ளனர். இந்த 2 தேர்வுகளும் காலையில் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை தெரியாதவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர் களுக்கு தேர்வு மையங்கள் தரை தளத்திலே அமைக்கப் பட்டுள்ளன.
மேலும் தேர்வை கண் காணிக்க சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக் கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள். பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் செங்கல் பட்டு மாவட்டமும், தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் திருவள்ளூர் மாவட்டமும், இயக்குனர் லதா சென்னை, உஷாராணி ராணிப் பேட்டை, குப்புசாமி சேலம், எஸ். உமா கோவை, சுகன்யா கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்ட ங்களில் தேர்வு கண்காணிப்பு பொறுப்பு களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.