‘மத்திய, மாநில கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க.வுக்கு தோழமை கட்சிகள்தான்’ - பிரேமலதா விஜயகாந்த்

அரசியல் நிலைப்பாடு என்பது, கட்சியின் விருப்பத்தைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
‘மத்திய, மாநில கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க.வுக்கு தோழமை கட்சிகள்தான்’ - பிரேமலதா விஜயகாந்த்
Published on

சென்னை,

சென்னையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“கூட்டணி குறித்து உரிய நேரத்தில் நாங்கள் அறிவிப்போம். எங்கள் மாவட்ட கழக செயலாளர்களிடம் கலந்தாலோசித்துள்ளோம். அவர்களின் விருப்பம், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பப்படி தே.மு.தி.க. இந்த முறை மகத்தான கூட்டணியை அமைக்கும்.

மத்திய, மாநில கட்சிகள் அனைத்தும் தே.மு.தி.க.வுக்கு தோழமை கட்சிகள்தான். கேப்டன் விஜயகாந்த் குருபூஜைக்கு அனைத்து கட்சியினரும் வந்திருந்தனர். அதே சமயம், அரசியல் நிலைப்பாடு என்பது, கட்சியின் விருப்பத்தைப் பொறுத்து எடுக்க வேண்டிய முடிவு. எனவே, தே.மு.தி.க.வின் எதிர்காலம் மற்றும் கட்சியின் விருப்பத்தை கருத்தில் கொண்டு எங்கள் அறிவிப்பு இருக்கும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com