

கன்னியாகுமரியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மணிப்பூரின் அமைதி சீர்குலைய பாஜகவே காரணம். தனிப்பட்ட மொழி, வரலாறு, பண்பாடு, கலாசாரம் சிதைக்கப்படக்கூடாது. அந்தந்த மாநிலங்கள்தான் அந்தந்த மாநிலங்களை ஆட்சி செய்ய வேண்டும். நாட்டின் அனைத்து கலாசாரங்களும் சம நிலையில் இருக்க வேண்டும். அதிமுக இப்போது வெற்று கூடாரமாகியுள்ளது. பிளவுவாத அரசியலை வளர்க்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸை எதிர்த்து போராடுவதே நம் அரசியல் களம்.
அனைத்து மொழிகளுக்கும் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு மொழியும் பொக்கிஷம். தமிழ்நாட்டில் பாஜக நுழைவதற்கான கருவியாக அதிமுக உள்ளது. தமிழ் மொழியை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் தமிழர்கள். தேர்தல் கட்டமைப்பை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம். தென் மாநில தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி நடைபெறுகிறது. பிரதமர் மோடியை டிரம்ப் கட்டுப்படுத்தியதுபோல, மோடியும் அதிமுகவை கட்டுப்படுத்த எண்ணம் கொண்டுள்ளார்
தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டம் எனும் சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எங்கள் கூட்டணி இதனை தொடர்ந்து செய்யும். 2 ஆயிரமாக உயர்த்த உறுதி அளித்துள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.