இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும். நாட்டை காப்பாற்ற தேர்தலுக்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாக வேண்டும். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்காமல் இருந்தாலும் சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com