'அனைத்து அரசு பேருந்துகளிலும் விரைவில் ஜி.பி.எஸ். கருவி' - அமைச்சர் சிவசங்கர் தகவல்


அனைத்து அரசு பேருந்துகளிலும் விரைவில் ஜி.பி.எஸ். கருவி - அமைச்சர் சிவசங்கர் தகவல்
x

அனைத்து அரசு பேருந்துகளிலும் விரைவில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அரசு பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி, தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"வைக்கம் போராட்ட நூற்றாண்டு வெற்றி விழாவின் நினைவாக வைக்கத்தில் இருந்து சென்னைக்கு பேருந்து சேவை இயக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆசிரியர் கி.விரமணி கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி வைக்கம்-சென்னை வழித்தடத்தில் 2 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அரசு பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் திட்டம் முதற்கட்டமாக சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்."

இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

1 More update

Next Story