பிப்ரவரி 2, 3ல் அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


பிப்ரவரி 2, 3ல் அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போதுமான எழுத்தர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படாததால் ஊழியர்கள் பணிச்சுமை அதிகரித்துள்ளது. மேலும் கருணை அடிப்படையில் சுமார் 100 பணியிடங்கள் நியமனம் செய்யாமல் வங்கி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதன் காரணமாக பணியில் இருக்கும் போது மறைந்த ஊழியர்களின் குடும்பம் வாழ்வாதாரம் இழந்துள்ளது.

கியூ.ஆர்.கோடு அடிப்படையில் வங்கி ஊழியர்களின் புகைப்படங்களுடன் தனி நபர் கருத்து பெரும் முறையை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி தேவர் பூரம் ரோட்டில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலகம் முன்பு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் துணைத் தலைவர் அந்தோணி தனபாலன் தலைமையில், காட்வின் ஆபிரகாம், நவநீதகிருஷ்ணன், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 27-ம் தேதி அனைத்து வங்கிகள் சார்பில் நடைபெறும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதுடன், வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story