ஈரோட்டில் அகில இந்திய சான்றோர் மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் அகில இந்திய சான்றோர் மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் அகில இந்திய சான்றோர் மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில், அகில இந்திய சான்றோர் மக்கள் கழகம் மற்றும் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ரா.கார்த்திக் ராயப்பன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகன், இளைஞர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன், ஆலோசகர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிறுவன தலைவர் ஏ.என்.சதாநாடார் கலந்து கொண்டு பேசினார்.

தமிழகத்துக்கு காவிரி தீர்ப்பின் அடிப்படையில் முழு அளவில் கர்நாடகா அரசு தண்ணீரை திறந்துவிட வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம், பெயரை அவமானப்படுத்தும் செயலை கண்டித்தும், காவிரி நதிநீர் பிரச்சினைக்காக குரல் கொடுத்த ஹரிநாடாரை 2 ஆண்டுகளாக பெங்களுரு சிறையில் அடைத்திருப்பதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்தும், கர்நாடகா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் தெலுங்கானா மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயசிவா, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம், கொங்கு மண்டல பொறுப்பாளர் கமல், அமைப்பு செயலாளர் சுரேஷ், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன், கொங்கு மண்டல இளைஞர் அணி செயலாளர் நவீன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com