திமுகவை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும் - டிடிவி தினகரன்

திமுகவை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறினார்.
திமுகவை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும் - டிடிவி தினகரன்
Published on

மதுரை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் டிடிவி தினகரன் கூறியதாவது:-

திமுக ஆட்சிக்கு வந்ததற்கு, எடப்பாடி பழனிசாமியே காரணம். எடப்பாடி பழனிசாமியின், செயல்படுத்த முடியாத வாக்குறுதியால் அதிமுக ஆட்சியை இழந்துள்ளது. அவருக்கு தற்காலிக வெற்றியே கிடைத்துள்ளது. துரோகிகள் கைகளில் இரட்டை இலை சின்னம் இருப்பதால் சின்னம் பலவீனம் அடைந்துள்ளது.

அம்மாவின் தொண்டர்களாக நாம் அனைவரும் ஓர் அணியில் செயல்பட்டால் தான் நாடாளுமன்றத்தில் அதிமுக வெல்ல முடியும். திமுகவை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் கூட்டணி அமைக்க வேண்டும். சுவாசம் உள்ளவரை ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர போராடுவோம்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி வகித்தாலும், அதிமுக ஜொலிக்க வாய்ப்பில்லை. இரட்டை இலை சின்னம் இருந்தும் நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com