முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தவிர அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்பு

அதிமுக எம்.எல்.ஏ சிவி சண்முகம் தவிர்த்து மீதமுள்ள 232 எம்.எல்.ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தவிர அனைத்து எம்.எல்.ஏக்களும் பதவியேற்பு
Published on

17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில், தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா முன்னிலையில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உட்பட பேரவையின் புதிய உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர். தவெக எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான கீர்த்தனா உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் சான்றிதழை மறந்ததால், எம்.எல்.ஏ.வாக பதவியேற்கவில்லை.

சான்றிதழை மறந்து வந்ததால், அவர்கள் பெயரை அழைத்த போது பதவியேற்கவில்லை. எனினும், சிறிது நேரத்தில் மீண்டும் சான்றிதழுடன் பதவியேற்றுக்கொண்டனர். ஆனால் சி.வி. சண்முகம் மட்டும் இன்னும் பதவியேற்கவில்லை. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சி.வி. சண்முகம் தவிர்த்து மீதமுள்ள 232 எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

சி.வி. சண்முகம் அவைக்கு வந்த போதும் பாதியிலேயே கிளம்பிச் சென்றார். இதனால், அவர் இன்றைய தினம் பதவியேற்கவில்லை. சபாநாயகர் அறையில் அதிகாரிகள் முன்னிலையில் எப்போது வேண்டுமானாலும் அவர் பதவியேற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com