திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும் - வி.கே.சசிகலா பேட்டி

சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவ படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார்.
திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும் - வி.கே.சசிகலா பேட்டி
Published on

சென்னை,

எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் எம்.ஜி.ஆர் உருவ படத்துக்கு வி.கே.சசிகலா மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,

எம். ஜி.ஆர் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எம். ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியில் எந்த முறை கையாளப்பட்டதோ அதே முறையை நானும் கையாளுகிறேன்

இப்போது தமிழகத்தில் நடக்க கூடிய ஆட்சியால் மக்கள் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சரியான திட்டம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டுக்காக அவசரமாக திறக்க வேண்டும் என்று திட்டமிடாமல் திறக்கப்பட்டது.

திமுகவை வீழ்த்த அதிமுகவின் அனைவரும் ஒன்றுபட வேண்டும் . ஐந்து விரலும் ஒன்றாக இருப்பதில்லை, எல்லா விரலும் ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஜல்லிக்கட்டில் பெரிய குளறுபடி நடக்கிறது. அமைச்சர்கள் கூறும் மாட்டுக்கு மட்டுமே பரிசு என்று கூறுகிறார்கள். என  தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com