

சென்னை,
மாதந்தோறும் 2-வது சனிக்கிழமையை தமிழக காவல்துறையினர் தூய்மை தினமாக கடைபிடிக்க வேண்டும். தூய்மை தின நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களையும் சுத்தப்படுத்த வேண்டும்.
மேலும் காவல்துறையின் கட்டிட அலுவலகங்கள், நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் அதை சார்ந்த இடங்களையும் தூய்மைப்படுத்தும் பணியை செய்ய வேண்டும்.
இதை கண்காணிக்க அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். இவை சரியாக நடைபெறுகிறதா? என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் திடீரென்று ஆய்வு செய்ய வேண்டும். இந்த தூய்மைப்பணிகள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.
மேற்கண்ட பணிகளை தவறாது செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார்.
வெகுமதி வழங்க வேண்டும்
தூய்மையான காவல் நிலையங்கள் அல்லது அலுவலகங்களை தேர்வு செய்து உயர் அதிகாரிகள் உரிய வெகுமதியும் வழங்க வேண்டும் என்று சைலேந்திரபாபு தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.
சைலேந்திரபாபு உத்தரவுப்படி இந்த மாதத்தில் 2-வது சனிக்கிழமையான இன்று தமிழக காவல்துறையினர் தூய்மை தினமாக கடைபிடிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.