அனைத்து வாக்குச்சாவடிகளும் தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது- தேர்தல் ஆணையம்

அனைத்து வாக்குச்சாவடிகளும் தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
அனைத்து வாக்குச்சாவடிகளும் தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது- தேர்தல் ஆணையம்
Published on

சென்னை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : 9 மணி நிலவரப்படி 7.32% வாக்குகள் பதிவவானது.

77 ஆம் எண் வாக்கு சாவடியில் ஒரு இயந்திரம் பழுதானது. அரைமணி நேரமாக வாக்காளர்கள் அவதிப்பட்டனர். மாற்று இயந்திரம் பொருத்தும் பணியில் தேர்தல் ஆணையம். தீவிரம் காட்டி வருகிறது.

மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒருசில வாக்குச்சாவடியில் பழுதான வாக்கு இயந்திரங்கள் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. 5 மணிக்குள் வரிசையில் நிற்பவர்களுக்கு, எவ்வளவு நேரமானாலும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.

ஆர்.கே நகரில் பணபட்டுவாட நடந்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நேற்று இரவு சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினார்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் தலைமைச் செயலகத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

பழைய வண்ணாரப் பேட்டை டி.எச்.ரோட்டில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் மனைவி ஜீவாவுடன் வந்து ஓட்டு போட்டார்.

பழைய வண்ணாரப் பேட்டை டி.எச்.ரோட்டில் உள்ள வரதப்ப நாயுடு சிறுவர் இல்ல வாக்குச் சாவடியில் தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் காலை 8 மணிக்கு ஓட்டு போட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com