தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் ஒரு வாரத்தில் மூடப்படும்- அமைச்சர் துரைமுருகன்

திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து பேராசிரியர்களும், பணியாளர்களும் என்னை சந்தித்து புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் ஒரு வாரத்தில் மூடப்படும்- அமைச்சர் துரைமுருகன்
Published on

வேலூர் மாவட்டம், அனைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கநல்லூரில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு அரங்கம், கலைஞர் பஸ் நிலையம், பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்களின் திறப்பு விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக கனிமம் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு விழா அரங்கை திறந்து வைத்தார். பின்னர் புதுப்பானையில் பொங்கலிட்டு கால்நடைகளுடன் சமத்துவ பொங்கலும் கொண்டாடப்பட்டது. பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ''காலாவதியான மற்றும் அனுமதியின்றி செயல்படும் அனைத்து கல்குவாரிகளும் தமிழகம் முழுவதும் இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுவதுமாக மூடப்படும். திருவள்ளுவர் பல்கலைக்கழக ஊழல்கள் குறித்து பேராசிரியர்களும், பணியாளர்களும் என்னை சந்தித்து புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com