திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் - வெளியான அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று நேற்று நள்ளிரவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. காற்றின் திசை வேகமாறுபாடு காரணமாக அது சென்னை- தெற்கு ஆந்திரா இடையே நாளை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரை கடக்கும் போது அதிகனமழைபெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்தது.

இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும் என்றும், மழை நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகள் மட்டும் இயங்காது என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com