தவெக 150 தொகுதி வென்றாலும் கூட்டணி ஆட்சி தொடரும்: ஆதவ் அர்ஜுனா

மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்கு பெற யாருக்கு பணம் தர மாட்டோம் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
ஆதவ் அர்ஜுனா
Published on: 

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து தவெக தலைமையிலான மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:

வன்னி அரசு அமைச்சராக கூடாதா?

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதற்காக நாங்கள் சோபா கொடுத்தோம் என்கிறார்கள். ஆமாம், சோபா அனுப்பினோம்..ஐயூஎம்எல் 60 ஆண்டு அமைச்சரவையில் கால் மேல் கால் போட்டு அமைச்சராக அமர்வதற்காக சோபா அனுப்பினோம். ஏன் 60 ஆண்டுகளாக உங்கள் குடும்பத்தினர் மட்டும் தான் இருக்க வேண்டுமா? ஏன் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வன்னி அரசு அமைச்சராக கூடாதா? அது வன்னி அரசுக்கான பதவி அல்ல.. அது ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம். இந்த அரசியல் எல்லாம் உதயநிதிக்கு தெரியாது. 15 எம்பிக்கள் வைத்து கொண்டு 8 அமைச்சர்களை வாங்கினீர்களே? அதே விசிகவும், ஐயூஎம்எல்லும் அமைச்சர் பதவிகள் வாங்கினால், சோபா வாங்கிவிட்டார்கள் என்று பேசுவதா?

திமுக மீது தாக்கு

மதுராந்தகம், தாராபுரத்தில் வாக்கு பெற யாருக்கு பணம் தர மாட்டோம். எங்கள் தலைவர் மீது நம்பிக்கை உண்டு. திமுக எப்போதும் அதிகாரத்தை பற்றி மட்டுமே யோசிக்கும். திமுக 2வது முறை வென்றதாக வரலாறே இல்லை.

கூட்டணி ஆட்சி தொடரும்

சிறந்த ஆளுங்கட்சியாக திமுக இருந்ததில்லை. ஆட்சி அதிகாரத்தை பெற்று, குடும்ப ஆட்சி மட்டுமே இருக்க வேண்டும் என்ற பிம்பத்தை ஸ்டாலின் உருவாக்கினார். கூட்டணி இல்லாமல் திமுகவால் 10 தொகுதிகளில் வென்று காட்ட முடியுமா ? தவெக 150 தொகுதி வென்றாலும் கூட்டணி ஆட்சி தொடரும்" என்று பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com