

சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸுக்கும் அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸுக்கும் அக்கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு ஆர்வம் காட்டினாலும் அங்கு ஏற்கனவே உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாமக உள்ளே வந்தால் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என விசிக திட்டவட்டமாகக் கூறிவிட்டதால் அந்த கதவும் ராமதாஸ் தரப்பிற்கு அடைக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது..
அதேவேளையில் அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இருப்பதால் தார்மீக அடிப்படையில் அங்கு செல்வதிலும் ராமதாஸ் தரப்பிற்குப் பல சிக்கல்கள் நீடிக்கின்றன.
இத்தகைய இக்கட்டான அரசியல் சூழலில் தனது பலத்தை நிரூபிக்கவும் அடுத்தகட்ட நகர்வை முடிவு செய்யவும் டாக்டர் ராமதாஸ் இன்றைய கூட்டத்தைக் கூட்டியுள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் வியூகங்கள் குறித்தும் யாரிடம் கூட்டணி வைப்பது அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
திராவிட கட்சிகளுடன் தான் கூட்டணி இருக்கும். பிப்.28க்குள் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.