நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி - கமல்ஹாசன் பேட்டி

மாநிலங்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்ய சொல்லி இருக்கிறார் என்று கமல்ஹாசன் கூறினார்.
நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி - கமல்ஹாசன் பேட்டி
Published on

சென்னை,

திமுக சார்பில் மநீமவுக்கு ஒரு மாநிலங்களவை சீட்டு ஒதுக்கப்பட்ட நிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் மநீம தலைவர் கமல்ஹாசன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் கமல்ஹாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி கூறினோம்; மாநிலங்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக பேசினோம். மாநிலங்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லி இருக்கிறார்.

நாட்டுக்கு தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணிக்கு வந்துள்ளேன். முதல்முறையாக நாடாளுமன்ற அவைக்குள் எனது குரல் ஒலிக்க உள்ளது. ஆனால் என்னுடைய குரல் தமிழ்நாட்டுக்காக எப்போதும் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com